இதுவரை நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழ்மையினாலும் வறுமையினாலும் பிடிக்கப்பட்டிருப்பதால் அழுத்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள். மொத்த நாட்டு மக்களையும் வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமான செயற்பாட்டிற்கு ஐக்கிய மக்கள் சக்தி பிரவேசித்திருக்கிறது.
இதுவரை காலமும் அரச உத்தியோகத்தர்களை நாட்டுக்கு நஷ்டமானவர்களாகவும் சுமையானவர்களாகவும் இந்த அரசாங்கம் கருதி வந்தாலும், தற்பொழுது இந்த அரசாங்கத்திற்கு அரச உத்தியோகத்தர்கள் முக்கியமானவர்களாக மாறி இருக்கிறார்கள். இதற்குக் காரணம் சந்தர்ப்பவாதமே ஆகும். தமது இடத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக இனிப்பு பண்ட அரசியலை மேற்கொண்டு, அரச உத்தியோகத்தர்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரச சேவையால் நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக குறிப்பிட்ட இவர்கள், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி பொய் வாக்குறுதிகளை வழங்காது. சொல்வதையே செய்கின்றது. பொய்யான வாக்குறுதிகளுக்கு பதிலாக சரியான திட்டங்களை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் யுகம் ஆரம்பிக்கப்பட்டவுடன் அவை நிறைவேற்றப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு என்பனவற்றில் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ள விசேடமான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய செயல்படுத்துவோம். அரச ஊழியர்களுக்கு 2025 ஜனவரி முதல் சம்பளத்தை 24% ஆக அதிகரித்து அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற 17800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25000 வரை அதிகரிப்போம். அனைத்து அரச ஊழியர்களின் குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளம் 57500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பத்தாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (23) வரகாபொல நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
தற்பொழுது காணப்படுகின்ற வரிக் கொள்கையினால் அரச ஊழியர்கள் உட்பட தொழிலாளர் வர்க்கமே பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். தற்பொழுது அரச ஊழியர்களின் பெரும்பாலானவர்களின் சம்பளத்திற்கு அறவிடப்படுகின்ற வரி 6-36% வரையிலான உழைக்கும் போது செலுத்தும் வரி வீதம் 24% வரை குறைக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.