தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, அவுஸ்திரேலிய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பணியினால் ஏற்படும் மன உளைச்சலை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் எதிர்வரும் 26ம் திகதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
எவ்வாறாயினும், புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்த சட்ட வல்லுநர்கள், இந்த சட்டம் பணியிடங்களின் தலைவர்கள் தங்கள் ஊழியர்களை அலுவலக நேரத்திற்குப் பிறகு தொடர்புகொள்வதைத் தடுக்காது என்றும், ஊழியர்கள் இந்த உரிமையை அனுபவிக்கும் போது ஊழியரின் சம்பளம் மற்றும் பதவியின் பொறுப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.