follow the truth

follow the truth

September, 18, 2024
HomeTOP2ஓய்வூதியம் பெறுவோருக்கு 12,500 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு

ஓய்வூதியம் பெறுவோருக்கு 12,500 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு

Published on

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 2025 ஜனவரி முதல், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தலா ரூ.12,500 வழங்குவதற்கும், 2020ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாத ஊதிய உயர்வை வழங்கவும், அதற்கேற்ப அவர்களின் ஓய்வூதியத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள நிதி சாத்தியத்தின் அடிப்படையில் படிப்படியாக பொருத்தமாக பலன்களை வழங்க 2025 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச சேவையின் வினைத்திறனையும் செயற்திறனையும் விருத்தி செய்து மக்களுக்கு சிறந்த அரச சேவையை வழங்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு அரச சேவையில் விஞ்ஞான ரீதியில் வேலை ஆய்வு (Work Study) நடத்தப்பட்டு உரிய வகையில் அரச சேவையை மறுசீரமைப்பதற்கான விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு

மன்னாரில் இன்று (17) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் இணைந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை...

தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களும் நாளை (18) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் முடிக்கப்பட வேண்டும்...

வினாத்தாளை பகிர்ந்த அறுவர் கைது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை...