பி.சி.சி.ஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக இருக்கும் நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே, எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதியுடன், அவரது 4 ஆண்டு காலம் பதவி முடிகிறது. 3 முறை அந்த பதவியில் இருந்த அவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் ஐ.சி.சி.யின் பணிப்பாளராக ஒரு மாதத்தில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.சி.சி. பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க எதிர்வரும் 27 திகதி நிறைவடையவுள்ள நிலையில், ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கிறார் என்று தெரிகிறது.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஐ.சி.சி. புதிய பணிப்பாளராக ஜெய்ஷா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.