follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1தொடர் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக ஈஸ்டர் நஷ்டஈட்டை செலுத்தி முடித்தார் மைத்திரி

தொடர் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக ஈஸ்டர் நஷ்டஈட்டை செலுத்தி முடித்தார் மைத்திரி

Published on

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாவை அவர் 16.08.2024 அன்று செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாதுகாப்புப் படைத் தலைவரும் ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் 2023 ஜனவரி 12 ஆம் திகதி தீர்ப்பளித்ததை அடுத்து இந்த இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸுக்கு 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த தீர்மானத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடு தொகை 7 வழக்குகளில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...