முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தமது பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு இன்று (19) வந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் – ரோஹித அபேகுணவர்தன மன்டிசோரி பிள்ளைகளை வைத்து இவற்றை செய்ய முடியாது என தெரிவித்துள்ளார், நீங்கள் மொண்டிசோரி பிள்ளையா?
“அவர் என்னைப் பற்றி சொன்னாரா” அல்லது வேறு யாரையாவது பற்றியா என அவரிடம் கேட்க வேண்டும்.
ஊடகவியலாளர் – தமிழ் முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் உங்களால் வெற்றி பெற முடியுமா?
“மற்ற அரசியல் கட்சிகளைப் போல, தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெறுவதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றுவதில்லை.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. இல்லையேல் வடக்கு கிழக்கை இணைக்க முடியாது. இந்த நாட்டை பிரிக்க முடியாது.
பத்திரிக்கையாளர் – உங்கள் தந்தை விட்ட இடத்திலிருந்து தொடங்குவதாகச் சொல்கிறீர்களா?
“வெளிப்படையாக அதனையே கூறுகிறேன்.. 2015ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சியை எங்கு நிறுத்தியதோ, அங்கிருந்து ஆரம்பிப்பேன்..”