follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP2ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய் போதும்

ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய் போதும்

Published on

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு செலவிடப்படும் தொகை அதிகபட்சமாக 20 ரூபாவிற்கு உட்பட்டதாகக் கோரி ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார்.

தேர்தல் செலவுக் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணையம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வாக்காளருக்கு 300 ரூபா மற்றும் 250 ரூபா என பரிந்துரைத்தனர். தேசிய மக்கள் சக்தி வாக்காளருக்கு 200 மற்றும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 250 ரூபாவை பரிந்துரைத்ததாகவும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் பரிந்துரைத்தபடி தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட பெருந்தொகையில் பாரிய சிக்கல் இருப்பதாகவும், அதிகபட்ச தொகையை 20 ரூபாவாக தீர்மானிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...