கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பின் பல முக்கிய பகுதிகளுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள சொகுசு பஸ் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய – கொழும்பு கோட்டை பஸ் ஊழியர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் புதிய பணியிடங்களுக்கான நியமனங்களை வழங்க முடியாது எனவும் புதிய பஸ்களுக்கும் இது பொருந்தும் எனவும் சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு புதிய சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த புதிய பஸ் சேவைக்காக, 10 பெரிய அளவிலான சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பயணி ஒருவரிடமிருந்து பயணத்துக்கு 3,000 ரூபாய் கட்டணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.