follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்🔴(UPDATE) குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து! (படங்கள்)

🔴(UPDATE) குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து! (படங்கள்)

Published on

(Update) இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது

——————————————————————————————————

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் விமானப் படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.

விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி உறுதியாகத் தெரியவில்லை.

உடனடியாக உயிரிழப்புகள் பற்றி எதுவும் உறுதி செய்ய இயலவில்லை.

நஞ்சப்ப சத்திரம் அருகே ஹெலிகொப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரியில் நிகழ்ந்த இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக நீலகிரி ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய இராணுவ ஹெலிகொப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 இராணுவ உயரதிகாரிகளின் நிலை என்னவானது என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

Image

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...