தேர்தல்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களின்படி ஏதேனும் அவசர காலநிலை ஏற்பட்டாலும், ஒவ்வொரு பிரஜையும் வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வசதிகளையும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்கூட்டியே தயார்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும், குறிப்பாக தேர்தல் காலங்களில், அனர்த்தங்கள் தொடர்பான எந்தவொரு அவசர காலநிலையையும் எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அனைத்து அதிகாரிகளும் தயாராக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.