மனித நுகர்வுக்குத் தகுதியற்ற ஒரு டன்னுக்கும் அதிகமான பருப்பு தொகை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கொட்டையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று இடம்பெற்ற பரிசோதனையின் போதே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர் பருப்பை மீண்டும் பதப்படுத்தி சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.