எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொனராகலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மொனராகலை சிலோன்ரிச் ஹோட்டலில் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அந்தக் கட்சிகளின் பொதுப் பிரதிநிதிகள் இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 05 மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் 04 பேர் கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, விஜித பேருகொட, கயாஷான் நவனந்த மற்றும் குமாரசிறி ரத்நாயக்க ஆகியோர் ஆவர்.
மொட்டு கட்சி மொனராகலை மாவட்டத் தலைவர் ஷசீந்திர ராஜபக்ச நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கிறார்.
மொனராகலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்டத் தலைவர் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் திருமதி சுமேதா ஜி. ஜெயசிங்கவும் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக இந்த நிகழ்வில் இணைந்து கொண்டார்.
மொனராகலை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 10 ஆகும். அந்த உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் பிரதேச சபையாகும். இக்கலந்துரையாடலில் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டு உறுப்பினர்கள் 102 பேர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
திரண்டிருந்த மொனராகலை மாவட்டத்தின் அனைத்து பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற மொட்டு பிரதிநிதிகளும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக கைகளை உயர்த்தி உறுதியளித்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சுற்றி புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டு வருவதாக இந்த கலந்துரையாடலில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாட்டை நேசிக்கும் பலர் உட்பட பல தரப்பினரும் இதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த அமைச்சர், இந்த தேர்தல் யாருடைய தனிப்பட்ட தேவைகளையோ அரசியல் தேவைகளையோ நிறைவேற்றும் தேர்தல் அல்ல எனவும் தெரிவித்தார்.