ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான விசேட பாதுகாப்பு மற்றும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் பணி ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பில் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொல்துவ, பொரளை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, தலவத்துகொட மற்றும் வெலிக்கடை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1000 பொலிஸ் மற்றும் பொலிஸ் STF அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.