இலங்கையர்களுக்கு ருமேனியாவில் தொழில்ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான ஒரு வருட காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ருமேனியாவுக்கு தொழில்வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்கள் குழுவொன்றுக்கு விமான டிக்கட்களை வழங்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
ருமேனியா பணிக்காக தற்போது வரையில் சுமார் 800 பேரின் பட்டியல் தூதரகத்திடம் இருப்பதாகவும் அவர்களும் எதிர்காலத்தில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் பணியாளர்களின் நடத்தை மற்றும் திறனைப் பொறுத்து ஒரு வருட ஒப்பந்தத்தை மேலும் நீடிக்க வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார். இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.
மேலும் ருமேனிய வேலைகளுக்காக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பெரும் தொகையை அறவிடுவதாக வெளியான தகவல்கள் தவறானவை எனவும், ருமேனிய வேலைகளுக்காக பதிவு மற்றும் நிர்வாகக் கட்டணம், விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணங்களை மாத்திரமே அறவிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.