follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2தப்பியோடிய ஹசீனா அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

தப்பியோடிய ஹசீனா அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

Published on

தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் சதியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக எதிர்ப்புகளை எதிர்கொண்டு இராஜினாமா செய்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த செயின்ட் மார்ட்டின் தீவுகளின் மீது இறையாண்மையை வழங்கியிருந்தால், தான் தொடர்ந்தும் பதவியில் இருந்திருக்க முடிந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பிறகு முதல் முறையாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், நாட்டில் வன்முறைகள் மேலும் வளர்ச்சியடைவதைத் தடுப்பதற்காகவே தனது இராஜினாமா என்று குறிப்பிட்டுள்ள ஷேக் ஹசீனா, தீவிரவாதிகளிடம் விழ வேண்டாம் என்று பங்களாதேஷ் மக்களைக் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லொறி கவிழ்ந்து விபத்து – தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்தப்...

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,...

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...