பணத்துக்காக, அமைச்சுகளுக்காக, கிடைக்கும் வரங்களுக்காக, அங்கும் இங்கும் குதிக்கும் அரசியல் இந்த நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க மல்வானையில் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததையடுத்து, இனவாத விஷத்தை பொஹட்டுவ கட்சி வளர்த்ததாகவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மாறாக 2019ல் ஆட்சியைப் பெறுவதற்காக மலட்டுச் கொத்து, மலட்டுத் துணிகள் போன்றவற்றைப் பேசி முஸ்லிம் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தவே ஆட்சியாளர்கள் செயல்பட்டனர் என்றார்.
பைகம மல்வானையில் நேற்று (08) இடம்பெற்ற முஸ்லிம் சகோதரத்துவ பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.