follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2பங்களாதேஷ் ஒரு ரணிலைத் தேடுகிறது

பங்களாதேஷ் ஒரு ரணிலைத் தேடுகிறது

Published on

தற்போதைய பங்களாதேஷ் ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது என நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு துணிச்சலான தலைவர் பிறந்ததன் காரணமாகவே இலங்கை இவ்வாறான ஆபத்தான நிலைமையை மரபுரிமையாகப் பெறவில்லை என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“ஒட்டுமொத்த பங்களாதேஷுமே நெருப்புக் குவியல் ஆகிவிட்டது. இன்று பங்களாதேஷ் ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தலைவர் இந்த தாய் மண்ணில் பிறந்ததால் நமக்கு அந்த நிலை ஏற்படவில்லை.

நாட்டின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறிய போது, ​​ஒரு துளிகூட இரத்தம் சிந்தாமல் தாய்நாட்டின் அரசமைப்பை மீட்டெடுத்தவர் வேறுயாருமல்ல, எனவே நாம் இன்று சகல நிறங்களையும் கட்சிகளையும் புறந்தள்ளி எமது கடமையில் இணைந்து கொள்கின்றோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...