ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 157 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு இதுவரை 102 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, 24 மணித்தியாலத்திற்குள் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.