follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP2'நாமலுடன் இணைந்து கொள்ளுங்கள்.. பணம் தருகிறேன்..' - மஹிந்த

‘நாமலுடன் இணைந்து கொள்ளுங்கள்.. பணம் தருகிறேன்..’ – மஹிந்த

Published on

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தம்மிக்க பெரேரா ஏற்க மறுத்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனுடன், நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்காகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலை முதல் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்தில் நேரடியாகப் பணியாற்றுமாறு நாடு முழுவதிலும் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி ஊடாக உரையாடினார்.

அதற்குத் தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ...