சீனாவின் சிவில் விவகார பல்கலைக்கழகம் (Civil Affairs University) திருமணத்தை மையமாகக் கொண்ட திருமண சேவைகள் மற்றும் மேலாண்மை என்ற ஒரு புதிய இளநிலை பட்டப்படிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
திருமணம், தொழில் மற்றும் கலாசாரம் குறித்து இந்த படிப்பில் கற்பிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
திருமண சேவைகள் மற்றும் மேலாண்மை என்ற பாடத்திட்டம் செப்டம்பரில் தொடங்கும் என இப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் திருமண விகிதம் குறைந்து வரும் நிலையில் சமூக ஊடக பயனர்களிடமிருந்து சந்தேகம் மற்றும் விமர்சனங்களின் கலவையைத் தூண்டியது.
நாட்டின் 12 மாகாணங்களைச் சேர்ந்த 70 இளங்கலை மாணவர்கள் இந்தப் பாடநெறிக்கு உள்வாங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.