அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு டிம் வால்ஸ் போட்டியிடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது மினசோட்டா மாகாண ஆளுநராக உள்ள 60 வயதான டிம் வால்ஸை துணை ஜனாதிபதி வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.