சுற்றுலா இந்திய அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை (07) நடைபெற உள்ளது.
வழக்கம் போல் இந்திய அணியை ரோஹித் சர்மாவும், இலங்கை அணிக்கு சரித் அசலங்கவும் தலைமை தாங்குகின்றனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தது.
இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமையும் விசேட அம்சமாகும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், தொடரினை கைப்பற்றும்.
கடைசியாக 1997-ம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக தொடரை வென்றது.
அதன்படி சரித அசலங்க தலைமையிலான இலங்கை அணி 27 வருடங்களின் பின்னர் போட்டியை எதிர்பார்த்து நாளைய போட்டியில் விளையாடவுள்ளது.
1997ல் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது.
முதல் போட்டியில் இரண்டு ஓட்டங்களாலும், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்களாலும் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெற்றது, மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டது.
அந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 09 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்றிருந்த போதிலும், மோசமான வானிலையால் போட்டி தடைப்பட்டது.
அதன்படி அன்றைய தினம் போட்டியை முற்றாக கைவிட்டு மறுநாள் போட்டியை ஆரம்பிக்க போட்டி நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பு SSC மைதானத்தில் 24ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் 264 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட் இழப்புக்கு 255 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இதன்படி, இலங்கை அணி 3-0 என தொடரை கைப்பற்றியது.
போட்டி முழுவதும் 210 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய சனத் ஜயசூரிய போட்டியின் நாயகனாக விருதை வென்றார்.
இவர் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுவதும் சிறப்பு.