follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2வீதி விபத்துகளைக் குறைக்க சாரதிகளுக்கு புள்ளிவழங்கும் முறைமை விரைவில்

வீதி விபத்துகளைக் குறைக்க சாரதிகளுக்கு புள்ளிவழங்கும் முறைமை விரைவில்

Published on

வாகன புகை உமிழ்வு சான்றிதழ் பெற்ற பின்னர் அதே இடத்தில் இருந்து காப்புறுதி மற்றும் வாகன அனுமதிப் பத்திரம் பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

மேலும், வீதி விபத்துகளைக் குறைக்கும் வகையில், பொலிஸாரினால் வழங்கப்படும் புள்ளிவழங்கும் முறைமைக்குத் தேவையான தரவுக் கட்டமைப்பு மற்றும் பொலிஸாருக்கு வழங்க வேண்டிய உபகரணங்கள் பெறுவதற்கான கேள்விமனு கோரும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளன. அடுத்த மாதத்திற்குள் பொருத்தமான நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு அமைய புள்ளிகளை குறைக்க இருப்பதோடு அதனை நடைமுறைப்படுத்த முன்னர் செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு அறிவூட்டல் வாட்ஸ்அப் செய்திகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களின் பின்னர் இது தொடர்பான சட்டம் செயற்படுத்தப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...