மக்கள் வங்கியின் கல்கிரியகம கிளை அண்மையில் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த புதிய விசாலமான வளாகத்தில் டிஜிட்டல் வங்கி தொழில்நுட்பத்தால் முழு அளவிலான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு உரிய தரத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவம், அனுராதபுரம் பிராந்திய முகாமையாளர் அசித்த தனவலவிதான, உதவி பிராந்திய முகாமையாளர்களான ஐ.எஸ்.கிரிந்தகெதர, சுதேர ஜயசிங்க, எஸ்.பி.கே.ஏகநாயக்க, சிரேஷ்ட சட்ட அதிகாரி எஸ்.எம்.டி.குமாரி, கிளை முகாமையாளர் நெவில் திஸாநாயக்க, வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
1961 இல் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கி, இலங்கையின் முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றாகும், 15.2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது. 749 கிளைகள் கொண்ட நாட்டின் மிகப்பெரிய வலையமைப்பையும், டிஜிட்டல் வங்கிச் சேவையில் மறுக்கமுடியாத தலைமைத்துவத்தையும் கொண்டு, வங்கியானது இலங்கையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. தற்போது வங்கியானது நிலையான கண்ணோட்டத்துடன் ஃபிட்ச் மதிப்பீட்டின் மூலம் A (lka) இன் வெளிப்புற மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.