அண்மைய தினத்தில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து, நாட்டில் மாற்றங்கள் நடந்து, உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்து, அதன் மூலம் நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் என தெரிவித்தோம்.
இந்த செயன்முறையில் தியாகங்களைச் செய்யும் போது, அனைவரும் அந்த தியாகத்தைச் செய்ய வேண்டும். முதல் தியாகத்தை அரச தலைவரே செய்ய வேண்டும். அவர் நாட்டுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் எமது நாட்டில் அதன் மறுபக்கமே நடந்ததுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில், பெரும் செல்வந்தர்களையும், கோடீஸ்வரர்களையும் காப்பாற்றிவிட்டு, இந்நாட்டில் உழைக்கும் மக்களின் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில், பெரும் செல்வந்தர்கள் பணக்காரர்கள் என சகலரும் இந்த தியாகத்தைச் செய்ய வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் “விழுமியம் மிக்க சமூகத்துக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின்” குருநாகல் மாவட்ட மாநாடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (02) குருநாகல் நகரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள பல விவகாரைகளில் இருந்து பெருமளவான பிக்குகள் வருகை தந்திருந்தனர்.
பல்வேறு பிரச்சினைகளால் இன்று பல விகாரைகள் மூடப்பட்டுள்ளன. அந்தந்த கிராமங்களிலும் நகரங்களிலும் அமைந்து காணப்படும் மதவழிபாட்டுத் தளங்கள் அந்தந்த கிராமங்களினதும் நகரங்களினதும் சுபிட்சத்தின் மையங்களாகும். விகாரை கட்டமைப்புகளை பாதுகாத்து போஷித்து, மேம்படுத்துவதற்கு கெபகரு மாபிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவேன். இதன் மூலம் விகாரைகள் மற்றும் ஏனைய மத வழிபாட்டு தளங்களை அபிவிருத்தி செய்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மின்கட்டண அதிகரிப்பால் பல விகாரைகள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். இவ்விகாரை உட்பட பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி திட்டத்தை முன்னெடுப்போம். பாடசாலைகளில் ஸ்மார்ட் கல்வி போன்று விகாரைகள், மத வழிபாட்டுத் தலங்களிலும் இந்த ஸ்மார்ட் திட்டங்களை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.