ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு கொழும்பு மாவட்ட நீதிபதி சதுன் விதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.