தலைவனாக விளையாடிய முதல் தொடரிலேயே தோல்வியை தான் ஏற்றுக் கொள்வதாக இருபதுக்கு20 அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச வீரராக அழுத்தத்தை எதிர்கொள்ள அனைவரின் மனமும் திடமாக இருக்க வேண்டும் என்று அங்கு கூறினார்.
நேற்று (30) இடம்பெற்ற போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த சரித் அசலங்க;
“இது ஒரு கடினமான நேரம் மற்றும் கேப்டனாக முதல் போட்டி தோல்வியடைந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இது ரசிகர்களுக்கும் எனக்கும் அணிக்கும் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ரசிகர்களை நாம் மீண்டும் ஏமாற்றிவிட்டோம். நாம் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குழுவுடனும் இதுகுறித்து நானும் பேசினேன். நாங்கள் சிறந்த நிலை அணிகளில் விளையாடுகிறோம் என்று நான் நினைக்கிறேன், நாங்கள் எங்கள் திறமைகளை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆட்டத்தின் கடைசி 12 பந்துகளில் நாங்கள் 09 ஓட்டங்களை எடுக்க வேண்டியிருந்தது. நான் முன்பே சொன்னது போல், இந்த நிலையில் நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். இனிமேலாவது பயிற்சி செய்ய வேண்டும்.
முதலில் செய்ய வேண்டியது பயிற்சி. நாங்கள் எவ்வளவு பயிற்சி எடுத்தோம் என்பது முக்கியமில்லை, சர்வதேச வீரர்களைப் போல் நடந்து கொள்ள வேண்டும்..” என்றார்.