ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று காலை வரை எண்பதுக்கும் மேற்பட்டோர் ரணிலுடன் இருப்பதாக உள்ளக வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்துச் சென்று அரசியல் பாலின மாற்றத்திற்கு உட்படுத்தினார்.
இதே நிலையை நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திலும் சமல் ராஜபக்சவின் மௌனக் கொள்கையே காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அவருக்கும் ஹார்மோன் ஊசி போட்டிருக்க வேண்டும். அவர் சுறுசுறுப்பாக இல்லாமல் இருக்கலாம். ஒரு ஹார்மோன் வேலை செய்ய நேரம் எடுக்குமே…”
அதன்படி எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் மேடையில் ராஜபக்ச ஒருவர் தோன்றினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.