follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2'எந்த இனத்தைச் சேர்ந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தாலும் தீவிரவாதத்திற்கு இடமில்லை'

‘எந்த இனத்தைச் சேர்ந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தாலும் தீவிரவாதத்திற்கு இடமில்லை’

Published on

நமது நாட்டில் எந்தவித தீவிரவாதத்திற்கு இடமில்லை. எந்த இனத்தைச் சேர்ந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தாலும் தீவிரவாதத்தை முன்னெடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 374 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கொழும்பு, தெஹிவலை, மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“.. இஸ்லாமிய சமூகத்தின் மரணித்த பிரேதங்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை வேண்டுமேன்றே மீறிய தரப்பினர் இன்று மன்னிப்பு கேட்கின்றனர். இனவாதம் மதவாதத்தை தூண்டி ஒன்றுபட்ட நாட்டில் பிளவை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தின் மதம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்காமல் அந்த கலாச்சாரத்தையும் மதத்தையும் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளைக் கூட புறக்கணித்து, செய்த குற்றத்திற்காக மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. அந்த பெரும் குற்றச்செயலால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இது தொடர்பான பிரேரணையைக் கூட நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.

நமது நாட்டில் எந்தவித தீவிரவாதத்திற்கு இடமில்லை. எந்த இனத்தைச் சேர்ந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தாலும் தீவிரவாதத்தை முன்னெடுக்க முடியாது. அனைத்து இனங்களுக்கும், அனைத்து மதங்களும் தமது கலாச்சார நடைமுறைகளை மதிப்பளித்து அதனைப் பின்பற்றுவதற்கு இடமளித்து, அவர்களுக்கான உரிமைகளை அனுமதிக்கும் நடுத்தர பாதையை தான் நான் பின்பற்றி வருகிறேன்.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களது பழக்க வழக்கங்களை கடைபிடிக்க அவர்களுக்கு பூரண உரிமை இருக்க வேண்டும். சிங்களம், தமிழ் முஸ்லிம் மற்றும் பர்கர் என பிரிந்து இருக்காமல், ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ வேண்டும்.

ஸ்மார்ட் கல்வியின் மூலம் ஸ்மார்ட் குடிமக்கள் உருவாகுவார்கள். ஸ்மார்ட் குடிமக்கள் ஒருபோதும் இனவாதம், மதவாதம், தீவிரவாதம் போன்றவற்றை கடைப்பிடிக்கப்போவதில்லை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று...

ஜனாதிபதியின் உரையினை விமர்சிக்க எவனுக்கும் உரிமையில்லை – பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது...