அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபா் கமலா ஹாரிஸின் பிரசாரத்துக்கு ஆதரவாக ஒரு வாரத்தில் சுமார் 20 கோடி டாலா் நன்கொடை குவிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயக கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் ஜோ பைடன்(81) போட்டியிடுவதாக இருந்தது.
ஜோ பைடன் தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கினார்.