இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 290 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.
மாதாந்தம் இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், சிறுவர்கள் தொடர்பான அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.