இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா இந்திய அணி 43 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி, 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
03 போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.