யாசகம் பெரும் நாடாக மாறினோம். அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்க எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தோம். திருடர்களோடு இருக்க முடியாததால் அவர் ஆட்சியை ஏற்கமாட்டார் என்று மறுத்ததாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
காலி நகர சபை மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற “ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்” கூட்டத்தில் உரையாற்றும்போதே வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.
வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“.. தீர்மானமிக்க தேர்தலொன்றை எதிர்கொண்டுள்ளோம். 2 வருடங்களுக்கு
முன்பிருந்த பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வருவதற்காக மேற்கொண்ட
முயற்சிகளை கைவிடக்கூடாது. அதற்காகவே கட்சி, இன,மத பேதங்கள்
இன்றி அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். நாட்டில் ஏற்பட்ட நிலைத்தன்மையைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
2022 ஏப்ரலில் நாட்டில் 13 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
எரிபொருள் இருக்கவில்லை. சமையல் எரிவாயு இருக்கவில்லை. 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தன. யாசகம் பெரும் நாடாக மாறினோம். அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்க எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தோம். திருடர்களோடு இருக்க முடியாததால் அவர் ஆட்சியை ஏற்கவில்லை என்று கூறினர்.
ஆனால் அதில் உண்மையில்லை. ஆட்சியை ஏற்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தபோது மத்திய வங்கி ஆளுநரையும் திறைசேரியின் செயலாளரையும் அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார். அந்த அதிகாரிகளை அழைத்து அவருக்கு மூன்று மணித்தியாலங்கள் நாட்டின் நிலையை தௌிவுபடுத்தினோம். ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹசீம் போன்ற எதிர்கட்சி உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். ஆனால் அவர்களினதும், கட்சியினதும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் நாட்டை பொறுப்பேற்கத் தயங்கினர்.
அப்போதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்டு,
குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெத்தார். நாம் கற்றுகொண்ட பாடங்களை
ஒருபோதும் மறக்க கூடாது.
இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழுவது தவறாகும். எனவே நாம் தற்போது ஏற்படுத்தியுள்ள நிலைத்தன்மையை பாதுகாப்பதாக? அதற்கு முரணாக செல்வதாக என்று தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது ;அஸ்வெசும’, ‘உறுமய’ திட்டங்கள் மற்றும் ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டம் என்பவற்றை ஆரம்பித்து மக்களுக்கு நிவாரணம் வழக்கி வருவதோடு மறுமுனையில் தடைப்பட்ட அனைத்து அபிவிருத்திகளையும் மீள ஆரம்பிக்க வழி செய்துள்ளார். எனவே நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதாலும் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதாலும் அதனை
செய்யக்கூடிய தலைவருடன் முன்னோக்கி பயணிக்க எதிர்பார்க்கிறோம்..”