இலங்கை அணியில் பல மாற்றங்களைச் செய்ய எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணியின் புதிய தலைவர் சரித் அசங்க தெரிவித்துள்ளார்.
அணி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குவதே தனது நோக்கம் எனத் தெரிவித்திருந்தார்.
சுதந்திரமாக விளையாடும் வீரர்களைப் பார்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என சரித் அசங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (27) நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டிக்கு முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இலங்கை அணியின் தலைவர் சரித் அசங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய தலைவர் சரித் அசலங்க;
“எனது அணியின் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் ஒரு தலைவராக, அதன் பிறகு வரும் விஷயங்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்க வேண்டும். எல்பிஎல் விளையாடுவது ஒரு பெரிய வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் எங்களுக்கு யார் யார் எப்படி விளையாடுவார்கள் என்று தெரியும். அணியில் 04 தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு..”