சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாடு நடத்தி வரும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், இனப் படுகொலைகளை கருத்தில் கொண்டும் அடுத்த ஆண்டு சீனாவில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜதந்திர ரீதியாக புறக்கணிப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விளையாட்டு போட்டிகளுக்கு வீரர், வீராங்கனைகளை அனுப்பவதும், அனுப்பாததும் அந்தந்த நாடுகளின் விருப்பம் என்று சர்வதேச ஒலிம்பிக் கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சரியான எதிர்வினை கிடைக்கும் என சீனா எச்சரித்துள்ளது.