follow the truth

follow the truth

April, 24, 2025
HomeTOP2வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி - 05 நாட்களில் 12 பேர் கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – 05 நாட்களில் 12 பேர் கைது

Published on

இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 12 பேர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கட்டார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா, கனடா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நியூசிலாந்தில் வேலை வாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகளை நடாத்திய குருநாகலில் உள்ள சட்டவிரோத முகவர் நிறுவனம் ஒன்றும் சோதனையிடப்பட்டதுடன், அங்கு இருந்த 108 கோப்புகளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மறு அறிவித்தல் வரைக்கும் கண்டிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிப்பு

மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த...

மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க கொள்கை ரீதியான முடிவு

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள...

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை இரண்டாக குறைப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள்...