2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் களம் காண்கின்றனர்.
இந்த 2024 -ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்க உள்ளன. அதில் ஆப்ரிக்காவில் இருந்து 54 நாடுகளும், ஐரோப்பாவில் இருந்து 48 நாடுகளும், அமெரிக்க கண்டத்தில் இருந்து 41 நாடுகளும், ஆசியாவில் இருந்து 44 நாடுகளும் பங்கேற்க உள்ளது. மேலும், மொத்தமாக 2,900 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 6 இலங்கை வீர – வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் நேற்றிரவு(24) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர்.