பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் முதல் கால்பந்து போட்டி ஆர்ஜன்டீனா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் மொரோக்கோ அணி 2:1 என்ற கணக்கில் ஆர்ஜன்டீனாவை தோற்கடித்தது.
இந்த போட்டியில் ஆர்ஜன்டீனா அடித்த இரண்டாவது கோல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மொரோக்கோ ரசிகர்கள் மைதானத்துக்குள் குத்தித்து ரகளை பண்ணியதால் போட்டி சுமார் 2 மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்பட்டன.
ஆனால் அந்த இரண்டாவது கோல் ரிவீவ் செய்யப்பட்டு அந்த சரியான முறையில் அடிக்கப்பட்ட கோல் அல்ல என்ற தீர்மானத்துக்கு நடுவர் வந்ததன் காரணத்தால் போட்டியில் மொரோக்கோ அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.