follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP1நாட்டை முன்னேற்றி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

நாட்டை முன்னேற்றி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

Published on

இலங்கை இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மாறாக உள்நாட்டிலேயே இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

இல்லாவிட்டால் கல்விக்காக பெருமளவு பணத்தைச் செலவு செய்யும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கான பலன் நாட்டுக்கு கிடைக்காது போகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கை தொடர்ந்தும் வளர்ச்சியடையாத நாடாக இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் 106 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

புதிய தொழிநுட்பத்திற்கு ஏற்ற வகையில் கல்வி முறையை சீர்திருத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தற்போது நாம் மீண்டுள்ளோம். வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டவுடன் எமக்கு வௌிநாட்டு உதவிகளும் கிடைக்கும்.

ஆனால் இன்னும் சில சிக்கல்கள் உள்ளன. எனவே, சரியான திட்டத்துடன் பயணிக்க வேண்டும். அதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இந்த பொருளாதார சுமையை படிப்படியாக குறைத்து பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம், மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க முடியும்.

மேலும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் இளைஞர் யுவதிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். எம்மால் 04 வருடங்களாக தொழில்வாய்ப்புகள் வழங்க முடியவில்லை. எதிர்காலத்தில் இவர்களின் தொகை மேலும் அதிகரிக்கும். அதற்கு தீர்வு காண வேண்டும். இப்பிரச்சினைகள் அதிகரித்தால் நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கலாம் .எனவே, தொழில் மற்றும் வருமான வழிகளை உருவாக்க நாட்டில் பெரிய பொருளாதார மாற்றம் செய்யப்பட வேண்டும்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திருகோணமலைக்கு மாற்றப்படும் போது சபுகஸ்கந்த பிரதேசத்தில் ஒரு பெரிய தொழில் பேட்டையொன்றை உருவாக்க முடியும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க புதிய முதலீடுகளைப் பெற வேண்டும். அவற்றை நிறுத்தினால் தொழில் வழங்க முடியாது. அப்போது நாட்டில் போராட்டங்கள் வெடிக்கலாம்.

இன்று நமது இளைஞர்கள் வேலை தேடி அமெரிக்கா, டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர். அந்த நாடுகளில் உள்ள நிலையை ஏன் இலங்கையில் உருவாக்கப்படவில்லை என்று கேட்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நாட்டை முன்னேற்றி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இல்லையேல் இந்தக் கல்வியால் நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அப்படியானால், நாம் எப்போதும் வறிய நாடாகவே இருக்க வேண்டியிருக்கும்.

அடுத்த 10 ஆண்டுகளில் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அந்த பொருளாதாரப் பரிமாற்றத்திற்கு தேவையான சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாம் அனைவரும் எதிர்காலத்தைப் பார்த்து பணியாற்ற வேண்டும். புதிய பொருளாதாரம் உருவாக்கப்படும் போது தொழில் பிரச்சினை தீர்ந்து இலங்கையில் தங்கக்கூடிய சூழல் உருவாகும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

காலி ஹோட்டலில் தாக்குதல் – பொலிஸ் விசாரணை

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக...

16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” நாளை முதல் ஆரம்பம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, நாளை (18)...