follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2"ரணில் ஜனாதிபதியாக இல்லாவிட்டால் நெடுஞ்சாலையில் அடித்துக் கொல்லப்பட்டிருப்போம்"

“ரணில் ஜனாதிபதியாக இல்லாவிட்டால் நெடுஞ்சாலையில் அடித்துக் கொல்லப்பட்டிருப்போம்”

Published on

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவியேற்காமல் இருந்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்திக்கு ஏற்பட்ட நிலையே எமக்கும் ஏற்பட்டிருக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொஹட்டுவ சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்கும் என்ற நம்பிக்கையில் தாம் இன்னும் இருப்பதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெலும் மாவத்தை அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில்;

கேள்வி – நீங்கள் இருவரும் இருவேறு கருத்துடையவர்கள். சரியான கருத்தை சொல்லுங்கள்?

பதில் – ஒரு வாரத்திற்குள் கூறுகிறோம்.

கேள்வி – அது ஏன்?

பதில் – எனது கருத்தை கூறிவிட்டேனே.. நான் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. நான் மாறவில்லை

கேள்வி – அதாவது ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு தேவை?

பதில் – ஆம்

கேள்வி – திஸ்ஸகுட்டியாராச்சி தனக்கு பொஹட்டுவையைச் சேர்ந்த ஒருவர் தேவை என்று கூறுகிறார்.

பதில் – அது சரி. நாங்கள் இருவரும் பொருத்தமான வேட்பாளர்களை விரும்புகிறோம்

கேள்வி – யாரு பொருத்தமானவர்?

பதில் – நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சி – நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?

கட்சி தலைமையகத்தில் இருந்து வெளியேறிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“.. இந்தக் கட்சியை உருவாக்கியது நான்தான். இந்த கட்சியை சேதப்படுத்துவதை நான் பார்க்க விரும்பவில்லை. அதனால்தான் அதைப் பற்றி பேச நான் தயாராக இல்லை. ஆனால் மேடையில் எனது கருத்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. நான் இன்னும் அந்தக் கருத்தில்தான் இருக்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்க வேண்டும். அந்த போராட்டம் வேறொருவரின் கைகளுக்கு சென்றிருந்தால், அமரகீர்த்திக்கு நேர்ந்ததே எங்களுக்கும், மஹிந்த, கோத்தபாயவுக்கும் நடந்திருக்கும் என்பதை அறிந்தவர்கள் இன்று நினைவில் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியது மட்டுமன்றி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்தார். அதை நாம் மதிக்க வேண்டும். போரில் மஹிந்த வெற்றி பெற்றதால் தான் நாம் மஹிந்தவுக்காக வெளியே வந்தோம். ஏனென்றால் அவர் நாட்டுக்கு சேவை செய்த தலைவர். இன்றும் அவருடன் இருக்கிறோம். அதனால் தான் இங்கு வந்துள்ளோம். கட்சி சரியான நேரத்தில் முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்..”

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...