உலகப் புகழ்பெற்ற வர்த்தகர் எலோன் மஸ்க் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மதுஷங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது Starlink சேவை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த திட்டத்தை தொடங்குவது தொடர்பான அரசின் நிலைப்பாட்டின்படி எலோன் மஸ்க்கின் வருகை தீர்மானிக்கப்படும்.
கடந்த மே மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வுடன் இணைந்து இலங்கையில் Starlink சேவை வசதியை அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் Elon Musk க்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.