இந்த நாட்டில் போதைப்பொருள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக ஆபத்தான மருந்துகளின் தேசிய கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் புகையிலை பாவனையினால் சுமார் 20,000 பேரும், மது பாவனையினால் 18,000 பேரும், மற்ற போதைப்பொருள் பாவனையினால் சுமார் 2,000 பேரும் உயிரிழப்பதாக தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என அதன் தலைவர் தெரிவித்தார்.