அரசவேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியுள்ளதை தொடர்ந்து பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தலைநகா் டாக்காவில் போராட்டம் நடத்த வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. தொலைபேசி இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
பொலிஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த மோதலில் மட்டும் 22 போ் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தை பயன்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
டாக்காவில் பொதுப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது வீதிகளில் பொலிஸார் இராணுவத்தினர் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.