நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாரிசுகள் கிராமங்களில் உள்ளவர்களே என்றும், அரசாங்கத்தில் அமர்ந்து கட்சி அலுவலக சாவியை கையளித்துக்கொண்டு சண்டியனைப் போன்று செயற்படுவது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புஞ்சி பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து ஆராயும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.