follow the truth

follow the truth

November, 23, 2024
Homeலைஃப்ஸ்டைல்கட்டாயம் சிரிக்க வேண்டும் - ஜப்பானில் சிரிப்பதற்கு ஒரு சட்டம்

கட்டாயம் சிரிக்க வேண்டும் – ஜப்பானில் சிரிப்பதற்கு ஒரு சட்டம்

Published on

மக்கள் பதற்றம், மன அழுத்தத்திலிருந்து விடுபட புதிய சட்டம் ஒன்றை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானின் யமகடா மாகாணம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது. உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அம்மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகமாகச் சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக யமகட்டா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. மன இறுக்கத்தைச் சிரிப்புப் பயிற்சி குறைப்பதுடன் இதயப் பாதிப்பு உள்ளிட்ட தீவிரப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஜப்பானின் இந்தச் சிரிப்புச் சட்டம் தனிமனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இதயப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலரால் மருத்துவக் காரணங்களால் சிரிக்க முடியாமல் போகலாம். அவ்வாறான சூழலில் இச்சட்டம் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இச்சட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்திவருகின்றனர்.

வேலை செய்யும் இடங்களிலும் சிரிப்பு நிறைந்த சூழலை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் எட்டாவது நாளை “சிரிப்பு தினமாக” கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

“சிரிப்பதா வேண்டாமா என்பது அரசியல் சாசனத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமை” என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனித உடலில் ஒளிந்திருக்கும் இரகசியங்கள்

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு. ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட...

பேஷன் அழகியான மூதாட்டி- வைரலான புகைப்படத்தினால் குவியும் வாய்ப்புக்கள்

வயது என்பது வெறும் நம்பர்தான் என்பார்கள். இதற்கு ஏற்றாற்போல ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 85 வயது...

பிரபலங்களை ஆட்டிப்படைக்கும் விவாகரத்து வரிசையில் ஏ.ஆர் ரஹ்மான்

இசை புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, தனது கணவரை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்று (19) இரவு, பத்திரிகையாளர்களுக்கு...