வாகன இறக்குமதி தொடர்பான குழுவின் அறிக்கை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சில அனுமதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மின்சார வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.