follow the truth

follow the truth

October, 5, 2024
Homeஉள்நாடுமலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே நோக்கம்

மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே நோக்கம்

Published on

பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்றது.

கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மக்களுக்கு நிரந்தர காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அதற்குத் தேவையான புரட்சிகர வேலைத்திட்டம் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.

அரச பெருந்தோட்டக் கம்பனி மற்றும் உள்ளூர் பெருந்தோட்டக் கம்பனிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை புதிய கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்தத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமான என்பதாலும் காலத்திற்கு உகந்த முன்மொழிவு என்பதாலும் இதற்கான கொள்கை ரீதியான உடன்பாடும் எட்டப்பட்டது.

இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்தும் போது மலையகத்தில் வாழும் அனைத்து மக்களினதும் காணி உரிமையை உறுதிப்படுத்துவது இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இது தொடர்பான பிரேரணையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மக்களுக்கு நிரந்தர காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அதற்குத் தேவையான புரட்சிகர வேலைத்திட்டம் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு குறிப்பிட்டார்.

உள்ளுர் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கலந்தாலோசித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்று அதற்கான சட்டச் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுதந்திர கட்சி கூட்டணியாக சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர்...

பியூமியிடம் மீண்டும் விசாரணை

பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய பியூமியிடம்...

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில்...