நாடு நெருக்கடிக்கு உள்ளான போது சஜித் பிரேமதாச பொறுப்பேற்காமல் ஓடிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி தானும் இரான் விக்ரமரத்ன, கபீர் ஹஷீம் மற்றும் ரஞ்சித் மத்தும் பண்டாரவும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அதிகார பரிமாற்றம் தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.
தேவைப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின் வாசலில் இருந்து வந்து பிரதமர் பதவியை கைப்பற்றியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.