ஆசிய கிண்ண மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி இன்று (17) பெயரிடப்பட்டது.
சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியில் 15 பெண் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆசிய கிண்ண மகளிர் 2020 கிரிக்கெட் போட்டிக்கு 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதன்படி, ஆசிய கிண்ண மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியில் சாமரி அத்தபத்து, விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, கவீஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, சுகந்திகா குமாரி, உதேஷிகா, பிரபோதனி,பிரபோதாஸ் இனோஷி பிரியதர்ஷனி, காவ்யா கவிந்தி, சச்சினி நிசன்சலா, ஷஷினி ஜும்ஜி மற்றும் அமா காஞ்சனா.
இந்த ஆண்டு, இலங்கை மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தினை நடத்துகிறது, போட்டிகள் ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் வரும் 19ம் திகதி தொடங்க உள்ளது.
இலங்கை மகளிர் அணி பங்கேற்கும் முதலாவது போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.