கொவிட் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய முதல் 5 நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்குவதாக இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பிராந்திய நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இது எமது நாட்டுக்கு பெருமை என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அதேபோன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் 3 இலட்சம் இலங்கையர்கள் தொழில் புரிவதாகவும், அதற்கும் மேலதிகமாக மேலும் பல இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகவும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதாவும் அமைச்சர் கூறினார்.